Others

Wednesday, 30 November 2022 05:06 AM , by: R. Balakrishnan

High Profit

புதிதாக வரும் முதலீட்டாளர்கள் ட்ரெண்டிங் ஃபண்ட் அல்லது நீண்டகால ஃபண்டில் (Long term fund) முதலீடு செய்வதிலே தங்களின் கவனத்தை செலுத்துவார்கள். ஆனால் அதிலும் குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதிலே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual fund)

புதிய முதலீட்டாளர்கள் குழப்பத்திற்கு ஆளாவது அதில் எங்கு முதலீடு செய்வது என்பதில்தான். ஆனால் சில ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நிதி மேலாளர்களுக்குச் சந்தை மூலதனமாக்கல் மற்றும் துறைகள்/தீம்களில் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றன. அதாவது, ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையில் அவரது கண்ணோட்டத்தின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க நினைக்கும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இத்திட்டங்களில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் முதலீட்டு எல்லையுடன் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம்.

2022 இல் முதலீடு செய்யச் சிறந்த ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளின் பட்டியல்:

  1. பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Parag Parikh Flexi Cap Fund)
  2. யூடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (UTI Flexi Cap Fund)
  3. பிஜிஐஎம் இந்தியா
    ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (PGIM India Flexi Cap Fund)
  4. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Aditya Birla Sun Life Flexi Cap Fund)
  5. எஸ்பிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (SBI Flexi Cap Fund)
  6. கனரா ரோபேக்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Canara Robeco Flexi Cap Fund)

Disclaimer:மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

குறைந்த விலையில் வீடு, நிலம் வாங்க சூப்பர் வாய்ப்பு: பொதுத்துறை வங்கியின் மெகா ஏலம்!

மாதம் ரூ.100 செலுத்தினால் போதும்: ரூ.3000 பென்சன் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)