பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் வீடு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் வீடுகளைக் கட்டித்தருகிறது. இத்திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகள், கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் வீடுகள் வழங்க அரசு முடிவு செய்தது. இதனுடன் மானிய வசதியும் வழங்கப்படுகிறது.
ரூ.2.67 லட்சம் மானியம்
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.2.67 லட்சமும், ஊரக வீட்டு வசதி திட்டத்தில் ரூ.1.67 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மதுரையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கௌஷல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
அப்போது மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பயனாளிகள் விவரங்கள், ஒதுக்கப்ட்டுள்ள நிதி, நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆகியவை குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்த கௌசல் கிஷோர், அவர்களது வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.
கனவு இல்லம்
அவர் பேசுகையில், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் போன்ற ஏழைமக்கள் இந்த திட்டத்தில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!