வங்கிக்கணக்கு என்பது இன்றைய நாட்களில் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் எந்த ஒருத் தேவைக்கும், வங்கிக் கணக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. அந்த வகையில்வங்கிக் கணக்குதாரர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயன்கள் இலவசம் வாரி வழங்குகிறது மத்திய அரசு. இதனைத் தெரிந்துகொண்டால், நிச்சயம் பயனடையலாம்.
ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் இலவசமாகவே கிடைக்கின்றன. ஆனால், இந்த சலுகைகள் குறித்து ஜன் தன் கணக்கு வைத்திருப்போருக்கே போதிய விழிப்புணர்வு இல்லை. ஆக, ஜன் தன் கணக்குதாரர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மேலும் படிக்க: 1 கிலோ மட்காத குப்பையைக் கொடுத்து ரூ.5 பெறலாம்! அது எப்படி?
கூட்டுறவு சங்கங்கள், அதிக பயிர் கடன்களை வழங்கும்!
ஜன் தன் யோஜனா
அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எல்லா வங்கிகளிலும் ஜன் தன் கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம்.
வட்டி
உங்கள் ஜன் தன் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொகை செலுத்தப்படும். எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பது அந்தந்த வங்கியை பொருத்தே அமையும்.
பேலன்ஸ் வேண்டாம்
ஜன் தன் கணக்குக்கு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே உங்கள் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் அபராதமோ, கட்டணமோ வசூலிக்கப்படமாட்டாது.
சிந்திக்கவும்: வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜமப்பா!
ஏடிஎம் கார்டு
ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. அதன் மூலம் பணம் எடுப்பது, ஷாப்பிங் செய்வது போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
இலவச இன்சூரன்ஸ்
ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் 2 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீடு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
ஓவர்டிராஃப்ட்
ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் 10,000 ரூபாய் வரை ஓவர்டிராஃப்ட் (overdraft) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நலத் திட்டங்கள்
ஜன் தன் கணக்கு வைத்திருப்போருக்கு அரசு திட்டங்களில் பயன்கள் நேரடியாக வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். எனவே முதலில் வங்கிக்கணக்கு இல்லாதவர்கள், அதனை ஜன்தன் கணக்காக முதலில் தொடங்க வேண்டும். பின்னர் மேற்கண்டச் சலுகைகளை உங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொண்டு, விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!