Others

Saturday, 18 March 2023 09:36 AM , by: R. Balakrishnan

Purity of Gold

இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது என்றுமே தீராத தாகம் உள்ளது. ஆகையால், விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானதா என்பதை அறிந்து கொண்டு வாங்குவது தான் சிறந்தது. தங்கத்தின் தூய்மை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தங்கத்தின் தூய்மை (Purity of Gold)

தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை தான் மிக மிக அவசியம். ஏனெனில், தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப தங்கத்தின் விலை வேறுபடுகிறது. ஆகவே தூய்மை குறைவான தங்கத்துக்கு அதிக விலை கொடுத்து விடாமல் இருக்க தூய்மையைப் பார்க்க வேண்டியது அவசியம்.

கேரட் (Carat)

தங்கத்தின் தூய்மை கேரட் (Carat) அடிப்படையில் அளவிடப்படுகிறது. அதாவது, தங்கத்துடன் மற்ற உலோகங்கள் எவ்வளவு கலக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதே கேரட் ஆகும். கேரட் வைத்து தங்கத்தின் தூய்மையை கண்டறிவது எப்படி என்பதை பார்க்கலாம்.

24 கேரட் தங்கம்

24 கேரட் தங்கம் என்பது 100% முழுக்க முழுக்க சுத்தமான தங்கம். இந்த 24 கேரட் தங்கத்தில் வேறு எந்த உலோகமும் கலந்திருக்காது.

22 கேரட் தங்கம்

22 கேரட் தங்கம் என்பது 91.70% சுத்தமான தங்கம். மீதம் 5% வெள்ளி, 2% காப்பர், 1.30% துத்தநாகம் ஆகிய உலோகங்கள் கலந்திருக்கும். பெரும்பாலான ஆபரணங்கள் 22 கேரட் தங்கத்தில் தான் உருவாக்கப்படுகின்றன.

18 கேரட் தங்கம்

18 கேரட் தங்கம் என்பது 75% சுத்தமான தங்கம். இதில் 15% வெள்ளியும், 10% காப்பரும் கலக்கப்பட்டிருக்கும்.

14 கேரட் தங்கம்

14 கேரட் தங்கம் 58.30% சுத்தமான தங்கம். மீதம் 30% வெள்ளியும், 11.70% காப்பரும் கலக்கப்பட்டிருக்கும்.

10 கேரட் தங்கம்

10 கேரட் தங்கம் 41.70% சுத்தமான தங்கம். இதில் 52% வெள்ளியும், 6.30% காப்பரும் கலக்கப்பட்டிருக்கும்.

9 கேரட் தங்கம்

9 கேரட் தங்கம் என்பது 37.5% சுத்தமான தங்கம். இதில் 42.50% வெள்ளியும், 20% காப்பரும் கலக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க

e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!

அதிகரித்துள்ள போலி ரேஷன் கார்டுகள்: மொத்தம் எவ்வளவு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)