இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் வரும் காலங்களில் கியா நிறுவனமும் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
கியா இவி6 (Kia EV6)
கியா இவி6 எலெக்ட்ரிக் கார் உலகளாவிய அளவில் கடந்த 2021ம் ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் 58 kWh மற்றும் 77.4 kWh என இரண்டு வகையான பேட்டரி தேர்வுகளுடன் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.
கியா நிரோ எலெக்ட்ரிக் கார் (Kia Niro EV)
புதிய தலைமுறை கியா நிரோ கார், உலகளாவிய அளவில் கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 2023ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய கியா நிரோ எலெக்ட்ரிக் காரானது, டிசைனை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ஐசி இன்ஜின் வெர்ஷன் போலவே இருக்கும். பழைய மாடலில் இருந்த அதே 64.8 kWh பேட்டரி தொகுப்புதான் புதிய தலைமுறை மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 463 கிலோ மீட்டர்கள் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் பிளாட்பார்ம்மை, தனது விலை குறைவான எலெக்ட்ரிக் காரை கட்டமைத்து கொள்வதற்கு கியா நிறுவனம் பயன்படுத்தி கொள்ளவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கியா நிறுவனத்தின் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வரும் 2024ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ஹெல்மெட் அணியாததன் விளைவு: உலக அளவில் 10 லட்சம் பேர் இறப்பு!
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!