தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இதில் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு (Interest Rate Hike)
புதிய வட்டி விகிதங்கள் நேற்று (செப்டம்பர் 8) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 3.50% வட்டியும், அதிகபட்சமாக 6.05% வட்டியும் வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி.
புதிய வட்டி விகிதங்கள்:
- 7 - 29 நாட்கள் : 3.50%
- 30 - 45 நாட்கள் : 3.60%
- 46 - 60 நாட்கள் : 4.00%
- 61 - 90 நாட்கள் : 4.75%
- 91 - 120 நாட்கள் : 5.25%
- 121 - 184 நாட்கள் : 5.25%
- 185 - 270 நாட்கள் : 5.50%
- 271 - 364 நாட்கள் : 5.70%
- 1 ஆண்டு - 5 ஆண்டுகள் : 6.05%
- 5 ஆண்டு - 10 ஆண்டு : 5.90%
மேலும் படிக்க
சிறிய சேமிப்பில் அதிக லாபம்: அள்ளிக் கொடுக்கும் அருமையான திட்டம்!