Others

Thursday, 10 March 2022 11:19 AM , by: Elavarse Sivakumar

பழைய 2 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து ரூ.5 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. பணத்தை மட்டுமல்ல, நாணயங்களையுமே பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அதிலும் புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நாணயங்களைப் போல, பழைய நாணயங்களையும் சேமிப்பதை சிலர் வழக்கமாக் கொண்டிருப்பர்.
அத்தகையோரின் கவனத்திற்கு, இந்த தகவல் அளிக்கப்படுகிறது.

அதிகத் தேவை

ஏனெனில் அரிய வகை பழைய நாணங்களுக்கு ஆன்லைனில் இப்போது அதிகத் தேவை இருக்கிறது. அந்த நாணயங்களின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவுதான். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் அந்த நாணயத்தைக் கொடுத்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம். கோடிகள் கூட சில நாணங்களுக்குக் கிடைக்கும்.

அப்படிப்பட்ட அரிய வகை நாணயம் உங்களிடம் இருந்தால் அதை விற்பனை செய்து நீங்களும் லட்சாதிபதியோ அல்லது கோடீஸ்வரரோ ஆகலாம். பழைய நாணயங்களை சேகரித்து வைப்பவர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இது பழைய 2 ரூபாய் நாணயம். இந்த நாணயத்தில் 1994 என்ற வருடம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட நாணயம் இது. இந்த நாணயத்துக்குத்தான் இப்போது ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது.

நாணயத்தின் பின் பக்கத்தில் உலக உணவு தினம் (World Food Day) என்று குறிக்கப்பட்டிருக்கும். இந்த நாணயம் உங்களிடம் இருந்தால் அதை Quikr வெப்சைட்டில் விற்பனை செய்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம்.

இந்த 2 ரூபாய் நாணயம் மட்டுமல்ல, 1 ரூபாய், 5 ரூபாய், 25 பைசா எனப் பல்வேறு அரிய வகை நாணயங்களுக்கு ஆன்லையில் இப்போது நிறைய டிமாண்ட் இருக்கிறது. காயின் பஜார், ஓ.எல்.எக்ஸ்., ஈபே போன்ற பல்வேறு வெப்சைட்களில் இந்த நாணயங்களை விற்பனை செய்யும் வசதி உள்ளது.

மேலும் படிக்க...

தொட்டால் உயிர்பறிக்கும் தாவரங்கள்- Death plant!

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)