மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஒவ்வொரு தனிநபரும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆதார் புதுப்பிப்பு (Aadhar Update)
உங்கள் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புதுப்பிக்கலாம். UIDAI இன் படி, ஒருவர் மக்கள்தொகை விவரங்களை - பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி - ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்க முடியும். இதற்காக, myaadhaar.uidai.gov.in வலைத்தளத்திற்குச் சென்ரு உங்கள் விவரங்களை புதுப்பிக்கலாம். நீங்கள் ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்றினால் அதற்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். அதே ஆஃப்லைன் எனில் (ஆதார் சேவை மையங்கள்) கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும் இருக்கும்.
ஆன்லைன் மூலம் ஆதார் புதுப்பிப்பு
- முதலில் myaadhaar.uidai.gov.in சென்று லாக்-இன் செய்யவும்.
- லாக்-இன் ஆனதும் ஆதார் அப்டேட் என்ற ஆஃப்சனை கிளிக் செய்யவும்
- அதில் வரும் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து ஒகே செய்ததும், உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்வது உறுதி செய்யவும்.
- அதன்பின் உங்கள் ஆதார் கார்டில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்யவும்.
- நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
- உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் Submit க்ளிக் செய்யவும்.
- அதன்பின் நீங்கள் கட்டணம் செலுத்து தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தி, உங்கள் ஆதார் அட்டை புதுப்பிப்பை உறுதி செய்யப்படும்.
மேலும் படிக்க