Others

Tuesday, 14 June 2022 08:36 PM , by: Elavarse Sivakumar

ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க கையில் காசு கட்டாயம். குறிப்பாக நாம் யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்பதில் அனைவருக்குமே அக்கறை இருக்கும். ஆக உங்களது அந்த அக்கறையை வெற்றியடையச் செய்ய உதவுகிறது, LIC யின் இந்தத் திட்டம். இது மத்திய அரசு நிறுவனம் என்பதால்தான் லட்சக்கணக்கானோரின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது LIC.

ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு எல்ஐசி திட்டங்களும் ஒரு நல்ல சாய்ஸ்.

இதில் பாதுகாப்பு மட்டுமல்லாமல் வருமானமும் சேர்த்து தரும் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி (LIC Jeevan Umang Policy) முக்கியமானது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பான பாலிசி. உங்கள் குடும்பத்துக்கு வருமானமும், பாதுகாப்பும் வழங்குகிறது.மெச்சூரிட்டியின்போது மொத்தமாக பலன்கள் உங்களிடம் செலுத்தப்படும்.

26 வயதில்

உதாரணமாக நீங்கள் 26 வயதில் ஜீவன் உமாங் பாலிசி வாங்குவதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கான இன்சூரன்ஸ் கவர் 4.5 லட்சம் ரூபாய் என வைத்துக்கொண்டால் மாதம் 1350 ரூபாய் தோராயமாக செலுத்த வேண்டும்.

தினமும் ரூ.45

மாதம் 1350 ரூபாய் என்பது ஒரு நாளைக்கு 45 ரூபாய் சேமிப்பு. ஆக ஒரு ஆண்டுக்கு பிரீமியமாக மொத்தம் 15,882 ரூபாய் செலுத்துகிறோம். 30 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்த பிரீமியத் தொகை 47,6460 ரூபாய்.
31ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு ஆண்டுக்கு 36000 ரூபாயை எல்ஐசி செலுத்தும். இத்தொகை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும். ஆண்டுக்கு 36000 ரூபாய் என்பது மாதம் 3000 ரூபாய் பென்சன் என வைத்துக்கொள்ளலாம்.

சலுகைகள்

இதுமட்டுமல்லாமல், ஜீவன் உமாங் பாலிசிதாரருக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரி சலுகையும் கிடைக்கும். 10 வயதை தொடும் முன் பாலிசிதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க...

லட்சாதிபதியாக விருப்பமா? சீக்ரெட் விஷயம் இதோ!

ஒரு ஆப்பிள்… இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)