குளிருக்காகப் பற்றவைத்த அடுப்பிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி 4 குழந்தைகள் மற்றும் தாய் பலியாகி உள்ளனர். இரவு நேரத்தைக் கருத்தில்கொண்டு, ஜன்னல்களை அடைத்திருந்ததால், நச்சுப்புகை வெளியேற வாய்ப்பு இல்லாமல், 4 குழந்தைகள் மற்றும் தாயின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.
ஹீட்டர் அவசியம்
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது கடுங் குளிர் வாட்டி வதைக்கிறது. எல்லா அறைகளிலும் ஹீட்டரைப் போட்டுக்கொண்டால் மட்டுமே சிரமமின்றி மூச்சுவிட முடியும் என்ற நிலைமை உள்ளது.
இந்தக் சூழ்நிலையில், டெல்லி சக்தாரா சீமபுரி என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டடத்தின் நான்காவது மாடியில் ராதா என்ற பெண் தனது நான்கு குழந்தைகள், கணவருடன் வாடகைக்கு வசித்து வந்தார்.
5 பேர் பலி (5 People dead)
காலையில் அவர்களது வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்து வந்து பார்த்த போது ராதாவும், அவரின் நான்கு குழந்தைகளும் மயங்கி கிடந்தனர்.
அவர்களைப் பரிசோதித்துப் பார்த்ததில் ராதா உட்பட 4 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. கடைசிக் குழந்தை மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.
அடுப்பே காரணம்
முதற்கட்ட விசாரணையில், இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
குளிருக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னல் உட்பட அனைத்தையும் முழுமையாக அடைத்துவிட்டு அடுப்பை பற்ற வைத்துவிட்டு 5 பேரும் உறங்கி இருக்கின்றனர்.
நச்சுப்புகை
ஆனால் அடுப்பு அதிக நேரம் எரிந்ததால், அதில் இருந்து வெளியான நச்சுப்புகை வெளியேற வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளது.
இதனால் 5 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...