எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களது பாலிசி திட்டம் காலாவதியாகிவிட்டால் அதற்கான கட்டணம் செலுத்தி காலாவதியான பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். காலாவதியான பாலிசியின் பிரீமியத்தை டெபாசிட் செய்ய வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது பாலிசிதாரர்களுக்கு அவ்வப்போது பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதாவது பாலிசி காலாவதி ஆகிவிட்டாலும் அதற்கு கட்டணம் செலுத்துவதன் மூலமாக காலாவதியான பாலிசியை புதுப்பித்துக் கொள்ளும் படியான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரீமியம் டெபாசிட் (Premium Deposit)
காலாவதியான பாலிசியில் பிரீமியம் டெபாசிட் செய்ய வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டேர்ம் இன்சூரன்ஸ், மல்டிபிள் ரிஸ்க் பாலிசிகள் போன்ற அதிக ரிஸ்க் இன்சுரன்ஸ் திட்டங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது முதல் பிரீமியம் செலுத்திய பிறகு தவறவிட்ட 5 ஆண்டுகளுக்குள் பிரீமியத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பிரீமியம் செலுத்தும் காலத்திற்குள் காலாவதியாகி அதன் புதுப்பிப்பு தேதிவரை முடிவடையாத பாலிசிகளை மீ்ண்டும் புதுப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பிரீமியம் உள்ள பாரம்பரிய மற்றும் உடல்நல காப்பீட்டில் தாமத கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 2000 தள்ளுபடி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால் அவகாசம் (Deadline)
ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான பிரீமியம் உள்ள பாரம்பரிய மற்றும் உடல்நல காப்பீடு தாமத கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 2500 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமாக பிரீமியம் உள்ள பாரம்பரிய மற்றும் உடல்நல காப்பீடு இந்த கட்டணத்தில் 30 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகபட்சமாக ரூபாய் 3000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் காலாவதியான பாலிசிகளை பாலிசிதாரர்கள் வரும் மார்ச் 25-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க விட்டால் இந்த காப்பீட்டின் பயன் கிடைக்காமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோருக்கு நல்ல செய்தி: புதிய விதிமுறைகள் அறிமுகம்!
ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: புதிய விதிமுறையை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!