தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கெடுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்தத் தேதிக்குள் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியத்தைப் பெறுவதில் சிக்கல் இருக்காது.
ஆயுள் சான்றிதழ்
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
காலக்கெடு
இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பென்சன் கிடைக்காது
பென்சன் வாங்கும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் கிடைக்காது.
நேர்காணல்
இந்த ஆண்டிற்கான ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் அரசு ஆணை எண்: 136 நிதி (ஓய்வூதியம்) நாள்:20.05.2022ன் படி 01.07.2022 முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுநாள் வரை 70 சதவீதத்துக்கும் மேலான ஓய்வூதிய நேர்காணல் முடிவுற்றுள்ளது.
அரசு உத்தரவு
30.09.2022 தேதிக்குள் ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றினை வழங்க வேண்டியுள்ளதால் , இது வரை வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர்கள் உடனடியாக தங்களது வாழ்நாள் சான்றினை 30.09.2022 தேதிக்குள் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறு சமர்ப்பிப்பது?
-
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழியில் சமர்ப்பிக்கலாம்.
-
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் சமர்ப்பிக்கலாம்
-
இந்திய அஞ்சல் துறை வங்கி (IPPB) சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம்
-
இ-சேவை மையம் (e-seva centre) மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக.
-
ஜீவன் பிரமான் முகம் செயலியினை (Face App) பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம்.
-
ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு ஜீவன் பிரமான் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழினை பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!