பொதுவாகவே மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிக் கடன் உதவியைப் பெறுகிறார்கள். கடன் பெறுவதற்காக மக்கள் வங்கிகளில் வரிசையில் காத்துக் கிடப்போர் ஏராளம். கடன் பெறுவதும் இப்போது எளிதாகிவிட்டது. ஆன்லைன் மூலமாக மிக எளிதாகக் கடன் பெற முடியும். இதனால், கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், இனி வரும் நாட்களிலும் கடன் வாங்குவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
வங்கி கடன் (Bank Loan)
வங்கிகளின் கடன் வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 15 சதவீதமாக இருக்கும் என CRISIL வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை கடன் வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த அளவாகும். நடப்பு நிதியாண்டைத் தவிர்த்து, அடுத்த நிதியாண்டிலும் கடன் வளர்ச்சி 15 சதவீதமாக இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கல்வி கற்க, கார் வாங்க எனப் பல்வேறு தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனர். விவசாயிகள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருமே வங்கிக் கடன்களையே பெருமளவில் சார்ந்து உள்ளனர். நகையை வைத்து கடன் வாங்குவோரும் அதிகம். வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டுமே குடும்ப செலவுகளையும் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிக் கடன்களை நம்பியே நிறையப் பேர் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
வங்கிகளும் அதற்கு ஏற்றாற்போல கடன்களை வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கடனை வாங்கி விட்டு நிறையப் பேர் ஏமாற்றுவதாலும் நாட்டை விட்டே தப்பி ஓடுவதாலும் வாராக் கடன் பிரச்சினையிலும் வங்கிகள் சிக்குகின்றன. எனினும் கடன் கொடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மேலும் படிக்க
71 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.48.5 லட்சம் கையில் கிடைக்கும் LIC-யின் சூப்பர் பாலிசி!
பெண்களுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை: இந்த மாநிலத்தில் தொடக்கம்!