Others

Wednesday, 11 August 2021 12:48 PM , by: T. Vigneshwaran

World's richest Indian village: Rs 5,000 crore deposited in 17 banks!

குஜராத் மாநிலத்தில் உள்ள மாதபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாக உருவெடுத்து சாதனைப் படைத்துள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் மதாபர் கிராமம் உலகின் பணக்கார கிராமமாக உருவெடுத்து மிகவும் வசதி படைத்த கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 7,600 குடியிருப்பு வீடுகள் இருக்கின்றது. இங்குள்ள  மக்கள் 17 க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளனர். தனி நபர் சேமிப்பு மட்டுமே ரூ. 15 லட்சமாக உள்ளது என்றும் இதனால் குஜராத்தில் உள்ள இந்த மாதபர் கிராமம் உலகளவின் பணக்கார கிராமமாக சாதனை படைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் மக்கள்தொகையில் அதிகமான மக்கள் இந்த கிராமத்தின் பணக்காரர்களாக உள்ளனர். இங்கு 17 பொது வங்கிகள் மட்டுமல்ல, கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், கோவில்கள், அணைகள், பசுமை மற்றும் ஏரிகள் அனைத்தும் உள்ளன. இவை அனைத்தையும் தவிர நவீன வசதிகளுடன் கோசாலையும் (state-of-the-art gaushala) அமைந்துள்ளது.

இந்த கிராமம் இந்தியாவின் மற்ற கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

 பெரும்பாலான கிராமத்து வீட்டு உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். இதனால் கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற அனைவரும் ஒரு கணிசமான தொகையை மாதப்பரில் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்புகிறார்கள்.

குடியிருப்பு அல்லாத இந்தியர்களில்(NRI) பலர் வெளிநாடுகளில் பெரும் தொகையை சம்பாதித்து நாடு திரும்பினர். அவர்கள், வெளிநாட்டில் பணம் சம்பாதித்து இக்கிராமத்தில் சொந்தத் தொழிலும் செய்து வருகின்றனர். மதாபர் கிராமம் சங்கம் என்று அழைக்கப்படும் அமைப்பு லண்டனில் 1968 இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் வெளிநாட்டில் வசிக்கும் மதாப்பரைச் சேர்ந்தவர்களின் சந்திப்பை எளிதாக்குவதாகும் என்று கருதப்படுகிறது.

கிராம மக்களிடையே மென்மையான இணைப்பை ஏற்படுத்த, இதே நோக்கத்துடன் அந்த கிராமத்திலும் ஒரு அலுவலகம் துவங்கப்பட்டது. கிராமவாசிகள் வெளிநாட்டில் வாழ்ந்து, வேலை செய்தாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேர்களை மத்தாப்பரின் மண்ணில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள். இதில் சொந்த தொழில்களும் செய்கிறார்கள்.

மேலும், அவர்கள் தற்போது வசிக்கும் நாட்டிற்கு பதிலாக, தங்கள் கிராமத்தின் வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். கிராமத்தின் முக்கிய தொழில் இன்னும் விவசாயமாகும், மற்றும் உற்பத்தி மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

வேலைக்கு வாங்க! சம்பளத்துடன் தங்கமும் வாங்கிட்டு போங்க!

தேசிய சமையல் எண்ணெய் திட்டத்தில் 11000 கோடி முதலீடு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)