இந்தியாவில் மட்டுமல்ல கொசு பிரச்சனை உலகம் முழுவதுமே இருக்கிறது. இரவில் தூங்கவிடாமல் தொந்தரவும் செய்தும், நோய்களை பரப்பும் இந்த கொசுவை ஒழிப்பதற்கு பல்வேறு கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. தெர்மாசெல் நிறுவனம் ஸ்மார்ட் கொசு விரட்டி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்திற்கு லிவ் என பெயரிடப்பட்டுள்ளது.
கொசு விரட்டி (Mosquito repellent)
இந்த கொசு விரட்டியை அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து கொள்ள முடியும். லிவ்+ என்ற மொபைல் செயலியும் இந்த ஸ்மார்ட் கொசு விரட்டியை இயக்குவதற்கு உதவுகிறது. கொசுக்களை விரட்டுவதற்கு இதில் தரப்பட்டுள்ள மருந்து ஒரு வாரத்திற்கு 8 மணி நேரம் என பயன்படுத்தினால் 12 வாரங்களுக்கு வரும். இந்த மருந்தில் 5.5 சதவீதம் மெட்டோஃபுளூதெரின் என்ற ரசாயனம் தரப்பட்டுள்ளது. இது சூடாக்கப்பட்டு புகை போன்று வெளியாகும். வாசம் எதுவும் இல்லாத இந்த புகை 20 அடி ரேடியஸுக்கு கொசுக்களை அண்ட விடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிவ் ஸ்மார்ட் கொசு விரட்டி (Live Smart Mosquito repellent)
தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த லிவ் கொசு விரட்டியின் விலை இந்திய மதிப்பில் ரூ.52,000 என கூறப்பட்டுள்ளது. இதில் மூன்று விரட்டிகள் தரப்பட்டிருக்கும். 945 சதுர அடிவரை இது கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்கும்.
ஒரு சாதனத்தில் 5 கொசு மருந்துகளை கனெக்ட் செய்ய முடியும். மருந்து தீர்ந்துவிட்டால் மீண்டும் நிரப்புவதற்கு 6 மருந்துகள் ரூ.9100 இந்திய மதிப்பில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க