பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 November, 2022 3:24 PM IST
Integrated Service Center Jobs: Salary Rs.20,000 per month!

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அப்படி என்ன திட்டம் அது? தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதில், ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலங்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான் ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (காலிப்பணியிடம் 01)

சமூகப் பணியில் முதுகலை பட்டம் M.S.W (Master's Degree In Social Work) பெற்றிருக்க வேண்டும். ஆலோசனை உளவியல் M.sc (Councelling Pychology or Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட, ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும்.

வழக்கு அலுவலர்கள் (Case Worker) காலிப்பணியிடங்கள் 06)

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree In Social Work) பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் (Counselling Psychology or Psychology) அல்லது (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/- ஆகும்.

பாதுகாப்பாளர் (Security Guard) காலிப்பணியிடங்கள் - 02

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சாரந்தவாரக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) காலிப்பணியிடங்கள் - 02

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

விரும்பும் பதவிகளுர்ரு (http://chennai.nic.in) என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 25. நவம்பர் 2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

மேலும் படிக்க:

தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today

தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்குமா அரசு?

English Summary: Integrated Service Center Jobs: Salary Rs.20,000 per month!
Published on: 15 November 2022, 03:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now