இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று நெக்ஸூ (Nexzu). ரோட்லார்க் (Roadlark) என்ற எலெக்ட்ரிக் சைக்கிளை நெக்ஸூ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் முக்கியமான சிறப்பம்சமே இதன் அதிக ரேஞ்ச்தான். இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.
அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பேட்டரி இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. எந்த வகையான எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் என்றாலும் அதிகமாக கவனிக்க கூடிய ஒரு விஷயம் ரேஞ்ச்தான். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை தீர்மானிப்பதில் ரேஞ்ச் முக்கியமான பங்கை வகிக்கிறது.
அதிக ரேஞ்ச் (High Range)
நெக்ஸூ ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளின் ரேஞ்ச் 100 கிலோ மீட்டர்களாக இருப்பது உண்மையிலே மிகவும் சிறப்பான விஷயம். நெக்ஸூ ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளில், BLDC 250w 36v மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என நெக்ஸூ நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து நெக்ஸூ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான பங்கஜ் திவாரி கூறுகையில், ''எலெக்ட்ரிக் சைக்கிள் சந்தையில் நெக்ஸூ ரோட்லார்க் மிகவும் முக்கியமான ஒரு தயாரிப்பாக இருக்கும்.
உடற்பயிற்சிக்காகவும் பலர் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதும் முக்கியமான ஒரு சிறப்பம்சம்.
வீட்டிற்கே டெலிவரி (Home Delivery)
இதுதவிர டைரக்ட் டூ ஹோம் மாடலையும் (Direct To Home Model) பின்பற்றி வருவதாக நெக்ஸூ நிறுவனம் கூறியுள்ளது. நெக்ஸூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா வெப்சைட்டில் செய்யப்படும் ஆர்டர்களுக்கு வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும்.
மேலும் படிக்க
திருமணப் பரிசாக பெட்ரோல்: இந்தியன் ஆயிலின் அசத்தலான அறிவிப்பு
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்: பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்!