Others

Wednesday, 01 December 2021 08:38 AM , by: Elavarse Sivakumar

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், திருமணப் பரிசு கூப்பன் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உயரும் விலை (Rising prices)

வறுமைக் கோட்டுக் கீழ் உள்ளவர்கள் முதல், வசதி படைத்தவர்கள் வரை, இருசக்கர வாகனம் வைத்திருப்பது வாடிக்கை. ஏனெனில், பேருந்துக்கு ஆகும் செலவைக் கணக்கிடும்போது, பொருளாதார ரீதியில் லாபம் தருவது இருசக்கர வாகனம்தான்.

ஆனால் அண்மைகாலமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், விலைஉயர்வு, வாகன ஓட்டிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பரிசு கூப்பன் திட்டம் (Gift Coupon Plan)

இந்நிலையில், பெட்ரோல், டீசல் போடும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், திருமணப் பரிசு கூப்பன் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒன் பார் யு (One for you)

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'ஒன் பார் யு' என்று, அழைக்கப்படும் பரிசு திட்டம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொள்ளும் எரிபொருள் கூப்பனை, நண்பர்களுக்கு பரிசாக வழங்கும் முறை துவங்கியது. இந்த கூப்பன், குறைந்தபட்சம் 500 முதல், அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

இத்திட்டம் மக்களிடம் முழுமையாக சென்றடைய தற்போது புதிய வழிகாட்டுதலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி உறவினர் மற்றும் நண்பர்கள் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்புவோர், கூப்பன்களை வழங்கலாம். அதனை பயன்படுத்தி, அவர்கள் பெட்ரோல் அல்லது டீசலை பெறலாம்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைதளத்தில் கூறி உள்ளதாவது: உங்கள் அன்புக்குரியவர்களின் புதிய துவக்கங்களை மிக சிறப்பானதாக மாற்றுங்கள். திருமணங்களை கொண்டாட சிறந்த பரிசாக இந்தியன் ஆயில் நிறுவன எரிபொருள் கூப்பன் உள்ளது.

பரிசளிக்க வாய்ப்பு (Opportunity to gift)

அவற்றை 'ஆன்லைன்' வாயிலாக பெற்று உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் அனைவருக்கும் பரிசளியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தக் கல்யாணப் பரிசு, மணமக்களுக்கும் என்றும் நினைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஒரு திருக்குறள் சொன்னால் 1 டாலர் பரிசு: புதுகை இன்ஜினியர் அசத்தல்!

மீண்டும் கிடைக்கிறது சிலிண்டர் மானியம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)