எல்பிஜி சிலிண்டர்(LPG) முன்பதிவு தற்சமயம் அதிகமாக உள்ளது. டிஜிட்டல் யுகத்தில், ஒரு பொத்தானைக் கிளிக் செய்தால் உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய பல முறைகள் வந்துவிட்டன. குறிப்பிடத்தக்க வகையில், Indane Gas, HP Gas மற்றும் Bharat Gas அனைத்தும் தங்களுடைய ஆதிகாரப்பூர்வ ஆன்லைன் எல்பிஜி புக்கிங்(LPG Booking) சேவைகளைக் கொண்டுள்ளன, இது வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் ரீஃபில்களை கேஸ் டீலர்ஷிப்பை அழைப்பது அல்லது பார்வையிடுவது போன்ற தொந்தரவு இல்லா முன்பதிவு செய்ய உபயோகமாக இருக்கும்.
இனி, நீங்கள் ஐபிபிபி(IPPB) மொபைல் பேங்கிங் ஆப் மூலம் எல்பிஜி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
"ஐபிபிபி(IPPB) அதன் மொபைல் பேங்கிங் செயலியில் இருந்து எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்வதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செய்கிறது" என இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ட்வீட் செய்து, வீடியோவை பகிரந்துள்ளது. இந்த வீடியோவில் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான படிப்படியான செயல்முறையை விளக்கியும் உள்ளனர்.
கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய எளிதான வழியைத் தேடுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம் மற்றும் IPPB Online மொபைல் பேங்கிங் பயன்பாட்டைப் பயன்படுத்தி இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டில் இருந்தப்படியே எரிவாயு சிலிண்டரை பெற்றிடலாம்.
இதோ வழி(Procedure)
-
உங்கள் ஸ்மார்ட் போனில் IPPB மொபைல் வங்கி செயலியை பதிவிறக்கவும்.
-
உள்நுழைந்து பின் பே பில் கிளிக்(Pay Bill) செய்து, எல்பிஜி சிலிண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் பில்லை தேர்ந்தெடுத்து, நுகர்வோர்/விநியோகஸ்தர்/எல்பிஜி ஐடி மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
-
கெட் பில் (Get Bill) என்பதைக் கிளிக் செய்து, கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும். பணம் செலுத்துதல், உறுதிப்படுத்துதல் என்பதைக் கிளிக் செய்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
-
உங்கள் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு வெற்றிகரமாக முடிந்த பின், உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் ஒன்று உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறுவீர்கள்.
-
மற்ற சேவைகள் மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு, செயலியில் உள்ள ஸ்கேன் மற்றும் கட்டண விருப்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தவும், இதில் வழி உள்ளது.
மேலும் படிக்க: