தங்களுடைய வளர்ப்பு செல்லப்பிராணிகளான நாய் அல்லது பூனையை எங்கு சென்றாலும் பயணிகள் அழைத்துச் செல்லலாம் என்ற புதிய விதிமுறையை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது. IRCTC மூலம் செல்லப்பிராணிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயணிகள் தங்கள் வளர்ப்பு செல்ல பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் இரண்டு இருக்கை கொண்ட Coupe அல்லது 4 இருக்கை கொண்ட Cabin புக் செய்தால் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றிருந்த நிலையில் அதனில் மாற்றம் கொண்டு வந்துள்ளது இந்தியன் ரயில்வே. மேலும் பயண நாளில் பார்சல் முன்பதிவு கவுன்டர் மூலம் முழு கேபினையும் முன்பதிவு செய்ய வேண்டிய சிரமமும் இருந்தது.
இந்நிலையில், ஏசி-1 வகுப்பு பெட்டிகளில் தங்களுடன் செல்லப் பிராணிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டினை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரயில் டிக்கெட் பரிசோதகர்களின் (TTEs) ஒப்புதலுடன் செல்லப்பிராணிகளை பார்சல் வேன்களிலும் கொண்டு செல்லலாம்.
பெரிய விலங்குகளுக்கு எப்படி அனுமதி?
குதிரைகள், மாடுகள் போன்ற பெரிய வளர்ப்பு விலங்குகளுக்கு முன்பதிவு செய்து சரக்கு ரயிலில் கொண்டு செல்லலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விலங்குகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் பயணிகளே முழு பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளை ரயிலில் கொண்டு செல்ல IRCTC வெளியிட்டுள்ள வழிகாட்டியின் விவரம்:
- ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அதன் நகல் எடுக்கவும்.
- உங்கள் செல்லப்பிராணிக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசிகளின் அறிக்கைகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
- புறப்படுவதற்கு 24 மணி முதல் 48 மணி நேரம் வரை கால்நடை மருத்துவர் கையொப்பமிட்ட உடல் நலன் குறித்த சான்றிதழைப் பெறவும். சான்றிதழில் செல்லப்பிராணியின் இனம், நிறம் மற்றும் பாலினம் பற்றிய விவரங்கள் இருக்க வேண்டும்.
- தேவையான அனைத்து அடையாள ஆவணங்களையும் எடுத்துச் செல்லவும்.
- பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் செல்லப்பிராணியை ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
- ஒரு பயணி (PNR) ஒரு செல்லப் பிராணி மட்டுமே உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
- ஏசி டயர் 1 அல்லது முதல் வகுப்பு கூபேக்கு பொருந்தக்கூடிய கட்டணங்களைச் செலுத்தவும்.
- AC2 அடுக்கு, AC 3 அடுக்கு, AC நாற்காலி கார், ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒருவர் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் செல்லப்பிராணியை வசதியாக வைத்திருக்க உணவு, தண்ணீர் அல்லது எதையும் எடுத்துச் செல்லுங்கள். ரயில் நிறுத்தங்களில் நீங்கள் அதனை வழங்க அனுமதிக்கப்படும்.
- உங்கள் செல்லப்பிராணியின் நடத்தை குறித்து சக பயணிகள் யாராவது புகார் அளித்தால், உடனடியாக செல்லப்பிராணி அகற்றப்படும்.
முன்பதிவு அல்லது முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு பயணிகள் தங்கள் செல்லப்பிராணியை எடுத்துச் சென்றால், பயண கட்டணத்தில் ஆறு மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும்.
pic courtesy: Divya Dugar
மேலும் காண்க:
குடும்பத்தோடு கோடையிலிருந்து தப்பிக்க.. டாப் 10 சுற்றுலாத்தலம் இதுதான்