அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நீண்ட தூர பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்துகள் தொடர்ந்து நீண்ட நேரம் இயக்கப்படுவதால், பயணிகளின் நலன் கருதி சாலை யோர உணவகங்களில் நிறுத்தப்படு வது வழக்கம் ஆகும்.
அவ்வாறு உள்ள உணவகங்களில் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடுகிறது. அரசு பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் டெண்டர் விதிமுறைகள் மீறப்படுகிறது எனவும், உணவகங்களில் விதிமுறைகள் பின்பற்றவதில்லை எனவும், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. குறிப்பாக இலவசமாக அனுமதிக்க வேண்டிய கழிவறைகளை பயன்படுத்த 5 முதல் 10 ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர்.
எனவே, அரசு பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில்
- கழிவறைக்கு பணம் வாங்கினால்
- MRPஐ விட அதிக விலைக்கு விற்றால்
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்படவில்லை என்றால்
- கணினி ரசீது கொடுக்கப்படவில்லை என்றால்
புகார் அளிக்க உதவி எண் அறிமுகம் செய்துள்ளார், போக்குவரகத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைந்த பயணிகள் குறை / புகார் அளிக்கும் உதவி எண் 1800 599 1500.
மேலும் படிக்க: இந்த மாநிலங்களுக்கு புத்த பூர்ணிமா-க்கு அரசு விடுமுறை உண்டா? இல்லையா?
மேலும் அரசு பஸ் என்ற இணையதள வாயிலாகவும், நீங்கள் புகார் அளிக்கலாம்.
அரசு பேருந்து என்ற இணையதளத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படும் சேவை, டிக்கெட் முன்பதிவு, கட்டண அமைப்பு, சேவைகளின் வகை, SETC உணவக விவரங்கள், TNSTC உணவக விவரங்கள், MTC பேருந்து நேரம், அனைத்து பேருந்து நேரம் மற்றும் சென்னை பல் ஆப் டவுன்லோட் செய்ய இணைப்பு போன்ற சேவைகளை பெறலாம். அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.arasubus.tn.gov.in/index.php
மேலும், தமிழக அரசு, சாலை போக்குவரத்து நிறுவனம், போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம், பல்லவன் போக்குவரத்து மற்றும் ஆலோசனை குழுமம் ஆகியவற்றின் முக்கியமான இணைப்புகளை பெறலாம்.
இச்செய்தி அரசு பேருந்துகளில் நெடு தூரம் பயணிக்கும் பயணாளிகளுக்கு பேரிதும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
மேலும் படிக்க:
கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்காக மத்திய அரசின் வரப்பிரசாதம்!