ரிலையன்ஸ் ஜியோ அதன் 5ஜி சேவையை, ஆகஸ்ட் 15ம் தேதியன்று அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வந்து விட்டால், 4ஜி சேவையின் விலை எகிறும் என்பதில் ஐயமில்லை.
ஜியோ 5ஜி (Jio 5G)
ஜியோ 5ஜி குறித்து, தொலைதொடர்பு துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த திங்கள் அன்று, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை துவங்கும் முயற்சியில் மும்முரம் காட்டத் துவங்கி உள்ளன. இந்த வகையில், 'பார்தி ஏர்டெல்' நிறுவனம், இம்மாதமே 5ஜி சேவைகள் அறிமுகம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளது.
மேலும், சேவைகளை துவங்குவதற்காக இந்நிறுவனம், 'எரிக்ஸன், நோக்கியா, சாம்சங்' ஆகிய நிறுவனங்களுடன், '5ஜி நெட்வொர்க்' ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதேபோல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், 5ஜி சேவையை அறிமுகப்படுத்த, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில், முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் ஆகக் கூடும் என்று அவர் கூறினார். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5G சேவையை வழங்க இருக்கிறது.
மேலும் படிக்க
செயற்கைகோளை வடிவமைத்த மதுரை மாணவிகள்: ஆசிரியர்கள் பெருமிதம்!