Others

Wednesday, 01 December 2021 08:58 AM , by: Elavarse Sivakumar

கிராமங்களில் குச்சிப் பொறுக்கிவந்து, அடுப்பூதிப் பெண்கள் அவதிப்படுவதைத் தடுக்கவே, முதலில் மண்ணெண்ணெய் ஸ்டவ், பின்னர் எரிவாயு சிலிண்டர் அடுப்பு உள்ளிட்டவைக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

அதேநேரத்தில், கிராமப்புற மக்களின் துயர் துடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம். இதன் கீழ் இலவச சிலிண்டரைப் பெறுவது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

உஜ்வாலா திட்டம்

இதன் பெயர் உஜ்வாலா திட்டம்.தற்போது உஜ்வாலா 2.0 என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

  • இத்திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனும் இலவச சிலிண்டரும் கிடைக்கும். உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பெறும் வழிமுறை என்ன?

  • http://www.pmuy.gov.in என்ற வெப்சைட்டில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அந்தப் படிவத்தில் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு விபரம், ஆதார் நம்பர் போன்ற விபரங்களைப் பதிவிட வேண்டும்.

  • பி.பி.எல் கார்டு, வங்கியில் சேமிப்புக் கணக்கு, ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவறையும் வழங்க வேண்டும்.

  • பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள் (conditions)

குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்.பி.ஜி. கணக்கு ஏதும் இருக்கக் கூடாது.

விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

மேலும் படிக்க...

ஒரு திருக்குறள் சொன்னால் 1 டாலர் பரிசு: புதுகை இன்ஜினியர் அசத்தல்!

மீண்டும் கிடைக்கிறது சிலிண்டர் மானியம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)