வீடு என்பது நம்மில் பலரது கனவு. அந்தக் கனவை நனவாக்க, நமக்கு வங்கிகள் பலவகைகளில் உதவி செய்கின்றன. அவ்வாறு புதிதாக வீடு வாங்கித் தங்கள் சொந்தவீட்டுக் கனவை நனவாக்க ஏதுவாக,
ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி (Standard Chartered Bank) புதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் Interest only Home loan. இந்தத் திட்டம் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வாங்கியபின் முதல் 36 மாதங்கள் வரை வெறும் வட்டி மட்டும் செலுத்தி வந்தால் போதும். அதற்குப் பிறகு வழக்கமான EMI தவணைகளை (அசல்+வட்டி) செலுத்த வேண்டும். அதாவது, வங்கி குறிப்பிடும் காலம் வரை வட்டி செலுத்த வேண்டும். பின்னர் EMI செலுத்தத் தொடங்கலாம்.
சரி இத்திட்டத்தால் நமக்கு என்ன பயன்? வட்டி மட்டும் செலுத்தும் காலத்தில் EMI தொகையில் பெரிதாக மிச்சப்படுத்த முடியும். சேமிப்புத் தொகையை முதலீடு செய்யவும் பயன்படுத்தலாம். முழுவீச்சில் உடனடியாக EMI செலுத்தாமல் கொஞ்சம் தள்ளிப்போட வாய்ப்பு கிடைக்கிறது.
எனினும் இதில் சில பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாக, வட்டி மட்டும் செலுத்தும் காலத்தில் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரிச் சலுகைகளை பெற முடியாது. இதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கடன் தொகை அதிகரிப்பதையும் மறுக்க முடியாது.
இந்தக் கடன் திட்டத்தை தேர்வு செய்யலாமா வேண்டாமா? இது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட சூழல், நிதிநிலை, நீண்டகால திட்டம் ஆகியவற்றை பொறுத்தது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!