காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப. தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC-Block Coordinator) பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகள் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கான தகுதிகள் விவரம் பின்வருமாறு-
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.
இருப்பிடம்: விண்ணப்பிக்கும் நபர்கள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.
பாலினம்: பெண்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 29.04.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் 29.04.2023-க்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
கொரோனாவிலிருந்து நம்ம தப்பிச்சதுக்கு இட்லியும், டீயும் தான் காரணமா?