கேரளாவின் கண்ணூரை சேர்ந்த சதிஷ் - சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ், 16. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார்கள். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார்.
102 மொழிகளில் பாடல்
இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010ல் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில், தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார்.
கின்னஸ் சாதனை
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இந்திய தூதரக கலையரங்கில் 122 மொழிகளில் பாடினார். இது உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றது. சுசேத்தா உலக குழந்தை மேதை உள்பட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுசேத்தா சதிஷ் கூறுகையில், 'எந்த மொழி பாடலாக இருந்தாலும் அதைக் கேட்டதும், மனனம் செய்து அதை சுலபமாக பாடுவேன். தற்போது, 29 இந்திய மொழிகள் உட்பட, 120 மொழிகளில் 7.20 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக சாதனை படைத்துள்ளேன்' என்றார்.
மேலும் படிக்க
பொறியியல் படிப்புக்கு கல்வி உதவித்தொகை: மாணவியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!