தற்போதைய வருமான வரித்துறை விதிமுறைகளின்படி உங்கள் நிரந்தர கணக்கு எண்ணையும் (PAN) ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. பல தடவை காலக்கெடு நீட்டிக்கப்பட்டும், ஆதார் - பான் அட்டையை இணைக்காதவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்.
ஆதார் - பான் (Aadhar - Pan)
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தரவுகளின்படி, நீங்கள் இரண்டையும் இணைக்கத் தவறினால், அவர்களின் பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதனால் உடனடியாக உங்கள் பான் கார்டை ஆதாருடன் எளிய முறையில் இணைப்பது எப்படி என இங்குக் காணலாம்.
முதலில் இரண்டையும் இணைக்க வருமான வரி (I-T) துறையின் அதிகாரப்பூர்வ https://www.incometax.gov.in/iec/foportal எனும் இணையதளம் மூலம் அப்டேட் செய்யலாம்.
இரண்டாவது முறையாக UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> என்று உங்கள் மொபைலில் டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்தால் போதும்.
உங்கள் பான் கார்ட் எண் உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும்.
அதன்பின் உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு உறுதிபடுத்தும் மெசேஜ் வரும். அடுத்து 24 மணிநேரத்தில் உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்ப்பட்ட மொபைல் நம்பரும் நீங்கள் பான் கார்டை இணைக்க மெசேஜ் அனுப்புன் நம்பரும் ஒரே எண்ணாக இருப்பது அவசியம்.
மேலும் படிக்க