Others

Thursday, 30 June 2022 07:12 AM , by: R. Balakrishnan

Aadhar - PAN card linking

பான்' எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி அறிவித்தது.

ஆதார் - பான் இணைப்பு (Aadhar - Pan Linking)

இருப்பினும், இதில் ஒரு பிடியையும் வைத்தது. மத்திய நேரடி வருமான வரி துறை, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, ஜூன் 30ம் தேதிக்குள்ளாக இணைப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. மேலும், ஜூலை முதல் தேதியிலிருந்து இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும். அதன் பிறகு அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போய்விடும் என்றும், கடந்த மார்ச் 30ம் தேதியன்று வருமான வரி துறை அறிவித்திருந்தது .எனவே, நாளை முதல் அபராதம் இரு மடங்காக உயர்கிறது.

பொதுமக்கள் உஷாராக இருந்து கொள்ளுங்கள். ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொண்டு, இல்லையெனில் இன்றே இணைத்து விடுங்கள்.

மேலும் படிக்க

ரேஷன் கார்டுதாரர்களே: ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி ஜூன் 30!

ரேஷன் கடையில் இணைய சேவை: விரைவில் தொடக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)