நவீன கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவக் கொடுக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமேரிக்காவில் ஒப்பிடமுடியாத நிபுணத்துவம் பெற்ற இந்திய விஞ்ஞானிகள் பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
உயரடுக்கு எஃப் -35 ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானங்கள் மற்றும் பல அதிநவீன உபகரணங்கள் என மிக முக்கியமான ராணுவ இயந்திரங்களை வைத்துள்ள அமெரிக்கா, சைபோர்க் வெட்டுக்கிளிகளை (cyborg locusts) உருவாக்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டில் உருவான பென்டகனின் இந்த ஆய்வுத் திட்டத்திற்கு, கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் நிதியுதவி அளித்து வருகிறது. வெட்டுக்கிளியின் கொடுக்குகள் டி.என்.டி (Trinitrotoluene) மற்றும் பிற வெடிபொருட்களின் வாசனையை வேறுபடுத்திப் பார்க்கும் மோப்பம் திறனைக் கொண்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்,இது ஒரு பாராட்டத்தக்க கண்டுபிடிப்பாகும்.
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவால் வெளியிடப்பட்ட 'பயோசென்சர்கள் மற்றும் பயோ எலக்ட்ரானிக்ஸ்: எக்ஸ்' (Biosensors and Bioelectronics: X’) என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது, அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வெடிகுண்டு இருப்பதை கண்டறிய வழக்கமாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக வெட்டுக்கிளிகளை பயன்படுத்தினால், மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். மிகவும் சிறிய அளவில் இருக்கும் வெட்டுக்கிளிகளை தொலைதூரத்திற்கு அனுப்புவதும் எளிதானது. எனவே, இது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வெட்டுக்கிளிகளில் சென்சார் கொண்ட ஆண்டெனா பொருத்தப்படும்.
எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டு சைபோர்க் வெட்டுக்கிளிகள் மோப்பம் பிடிக்க பயன்படுத்தப்படும். அதற்காக, டி.என்.டி, டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ், பி.இ.டி.என் (TNT, DNT, RDX, PETN), அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிக்கும் ரசாயனங்களை மோப்பம்ப் பிடிக்கும்பிடிக்கும் திறன் வெட்டுக்கிளிகளுக்கு உள்ளது என்று மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதை அவை ஒரு நொடிக்குள் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, locusts வகை வெட்டுக்கிளிகள் grasshoppers வகை வெட்டுக்கிளிகளிலிருந்து தனிச்சையானது, ஆராய்ச்சியில் locusts வகை வெட்டுக்கிளியே பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்ட்டுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் பெரிய அளவிலான திரள் திறனைக் கொண்டிருப்பதால் 250 மில்லியன் ஆண்டுகளில் நுகர்திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளன, அவற்றின் ஆண்டெனா அல்லது கொடுக்குகள் சுமார் 50 வெவ்வேறு வகை 50,000 நியூரான்களைக்கொண்டுள்ளன.
சைபோர்க் வெட்டுக்கிளிகள், அவற்றின் அபரிமிதமான நுண்ணுணர்வு காரணமாக, மைக்ரோ ரோபாட்டிக்ஸின் அளவு மற்றும் தேவைகளுக்கு பேட்டரி மூலம் இயக்க முடியும்.
இந்த ஆராய்ச்சியில், வெட்டுக்கிளிகள் மீது ‘insect-sized’ லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து, மின்முனைகள் மற்றும் டிரான்ஸ்மிட்டர்கள் உதவியுடன், வெட்டுக்கிளிகளின் நுகர்திறனை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
மின்னணு மூக்கு-electronic noses என்று பிரபலமாகக் கருதப்படும் இந்த பணிக்கான, பொறியியல் சாதனங்கள், உயிரியல் அதிர்வு அமைப்பின் பரந்த-ஸ்பெக்ட்ரம் திறன்களுடன் ஒப்பிடும்போது குறைந்த திறன் கொண்டவை. ஆகையால் கலப்பின பயோ-எலக்ட்ரானிக் தீர்வை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது, ஆல்ஃபாக்டரி சென்சார்கள் மற்றும் அதிநவீன நரம்பியல் கணக்கீட்டு கட்டமைப்பை நேரடியாகப் பயனில் வைத்திருக்கிறது.
வெட்டுக்கிளிகள் தனியாக இருப்பதை விட திரளாக இருக்கும்போது சிறந்த மோப்ப சக்தியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்களைப் போலவே வெட்டுக்கிளிகளும் பயன்படுத்தப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.
மேலும் படிக்க:
கொரோனா ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்களை பாதுகாக்கும்?
ஆயுஷ்மான் பாரத் அட்டை இலவசம்- ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் அட்டை மற்றும் காப்பீடு