மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை வருகிறது என ரிசர்வ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக சில விடுமுறைத் தினங்கள் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதம் முடிய உள்ள நிலையில், 2023 மே மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுவது, டிமாண்ட் டிராப்ட்களைப் பெறுவது மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்வது என பரப்பாக இயங்கி வருகிறது வங்கிகள். இதனிடையே வங்கிகளின் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சில சிரமங்களை சந்தித்து வருகின்றன. எனவே, மே 2023-க்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை மாநில வாரியாக கீழே பட்டியலிடுகிறோம். அதனடிப்படையில், பொது மக்கள் தங்கள் வங்கிச் செயல்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவும். விடுமுறை தினங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மே 1, 2023 - திங்கட்கிழமை - மே தினம்,மகாராஷ்டிரா தினம்
மே 5, 2023 - வெள்ளிக்கிழமை - புத்த பூர்ணிமா (டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்)
மே 7, 2023 - ஞாயிற்றுக்கிழமை (பொது வாராந்திர விடுமுறை)
மே 9, 2023 - செவ்வாய்க்கிழமை - ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் (கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
மே 13, 2023 - சனிக்கிழமை - இரண்டாவது சனிக்கிழமை (பொது விடுமுறை)
மே 14, 2023 - ஞாயிற்றுக்கிழமை (பொது வாராந்திர விடுமுறை)
மே 16, 2023 - செவ்வாய்க்கிழமை - சிக்கிம் தினம் (சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
மே 21, 2023 - ஞாயிற்றுக்கிழமை (பொது வாராந்திர விடுமுறை)
மே 22, 2023 - திங்கட்கிழமை - மகாராணா பிரதாப் ஜெயந்தி (குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்)
மே 24, 2023 - புதன்கிழமை - காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி (திரிபுராவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
மே 27, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
மே 28, 2023 - ஞாயிற்றுக்கிழமை (பொது வாராந்திர விடுமுறை)
வங்கி விடுமுறை நாட்களில் வங்கி நடவடிக்கைகளை நிர்வகிக்க, வாடிக்கையாளர்கள் மொபைல் அல்லது நெட் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த வசதிகள் வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யவும், ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கவும் உதவுகிறது.
மேலும் காண்க:
குளிர்பானம், பழச்சாறு கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை- காரணம் இது தான்..