Others

Thursday, 02 May 2024 05:56 PM , by: Muthukrishnan Murugan

MFOI VVIF kisan bharat yatra

MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக குஜராத்தின் மான்சா கிராமத்திலுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. மேலும், இந்த சந்திப்பின் போது நடப்பாண்டு நடைப்பெற உள்ள MFOI 2024 நிகழ்வு குறித்தும், அவற்றில் இடம்பெற்றுள்ள விருதுகளுக்கான பிரிவுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைய தினம் (மே 2) காந்திநகரில் உள்ள மான்சா கிராமத்தை சென்றடைந்தது பாரத் யாத்ரா. முற்போக்கு விவசாயி பிரகாஷ்பாய் படேல் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட ஜோகமாயா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் (FPO) ஊழியர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் யாத்ரா வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முற்போக்கு விவசாயியுடன் கலந்துரையாடல்:

முற்போக்கு விவசாயியான பிரகாஷ்பாய் படேலுடன், கிரிஷி ஜாக்ரன் நிருபர் நேர்க்காணல் மேற்கொண்டார். அதில் விவசாயி பிரகாஷ்பாய் மேற்கொண்டு வரும் விவசாய பணிகள் பற்றியும், அவர்களது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒரு பகுதியாக மற்றொரு வாகனம் இன்று ஹரியானா மாநிலத்தின் சமள்கா மாவட்டத்திலுள்ள ஜூரஸி சரப் காஷ் கிராமத்தை சென்றடைந்தது. அங்குள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து MFOI 2024 விருது நிகழ்வு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், முற்போக்கு விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

MFOI VVIF kisan bharat yatra:

MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.

MFOI 2024 நிகழ்வு: 2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?

சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)