Millionaire Farmer of India Awards Sponsored by Mahindra Tractors சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 'MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா' நிகழ்வு இன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான விவசாயிகளை கௌரவிக்கப்பட்டனர்.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா வேளாண் கண்காட்சியோடு கடந்த டிசம்பர் மாதம் 6,7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் நடைப்பெற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டிசம்பர் 6 புதன்கிழமை அன்று, MFOI, VVIF kisan Bharat yatra-வையும் தொடங்கி வைத்தார். MFOI,VVIF kisan Bharat yatra-வானது 26,000 கி.மீ தூரம், 4520-க்கும் மேற்பட்ட சந்திப்பு இடங்கள் என இந்தியா முழுவதும் பயணித்து பல லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் மில்லினியர் விவசாயிகளின் வெற்றிப் பாதையை காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
MFOI,VVIF kisan Bharat yatra வாகனம் ராஜஸ்தானின் கோட்டா பகுதியை சென்றடைந்த நிலையில், இதுத்தொடர்பான நிகழ்வு அங்கே நடத்தப்பட்டது. நிகழ்வில் கிரிஷி ஜாக்ரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டோமினிக் மற்றும் மூத்த விஞ்ஞானி டாக்டர் மகேந்திர சிங், (கோட்டாவின் கே.வி.கே., தலைவர்) மற்றும் ஆனந்தி லால் மீனா, (தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்) ஆகியோர் தலைமை விருந்தினராக பங்கேற்று மாவட்ட விவசாயிகளை கௌரவித்தனர்.
மேலும், 'ராபி பயிர்களைத் தாக்கும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, தினை சாகுபடி, டிராக்டர் பராமரிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடத்தப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த விஎன்ஆர் நர்சரி பிரைவேட் லிமிடெட் மற்றும் மஹிந்திரா டிராக்டர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் கண்காட்சி அமைத்திருந்தனர். VNR நர்சரி பிரைவேட் லிமிடெட் அதன் விதைகள் மற்றும் பழங்களைக் காட்சிப்படுத்தியது.
மஹிந்திரா டிராக்டர் நிறுவனம் சார்பில் அதன் சமீபத்திய அறிமுக டிராக்டர்களான Mahindra 585 YUVO TECH+ டிராக்டர், மஹிந்திரா OJA 3140 டிராக்டர், Mahindra NOVO 605 DI 4WD V1 டிராக்டர், மஹிந்திரா NOVO 655 DI PP V1 டிராக்டர், மஹிந்திரா OJA 2121 டிராக்டர், மஹிந்திரா NOVO 755 DI PP 4WD V1 டிராக்டர் ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருந்தது.
Read also:
டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை- IMD விடுத்த எச்சரிக்கை
மிக்ஜாம் புயலால் நீரில் மூழ்கிய பயிர்கள்- விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!