நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2024 6:22 PM IST
MFOI VVIF Kisan Bharat Yatra Rampura

MFOI, VVIF கிசான் பாரத் யாத்ராவின் ஒருபகுதியாக குஜராத்தின் பனாஸ்காத்தா (Banaskhatha) மாவட்டத்திலுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து கௌரவித்தது கிரிஷி ஜாக்ரன் குழு. மேலும், இந்த சந்திப்பின் போது நடப்பாண்டு நடைப்பெற உள்ள MFOI 2024 நிகழ்வு குறித்தும், அவற்றில் இடம்பெற்றுள்ள விருதுகளுக்கான பிரிவுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கிரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புகளில் ஒன்றான ”MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா” குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைய தினம் (ஏப்ரல் 29) பனாஸ்காத்தா மாவட்டத்திலுள்ள மாவசரி, கெலா ஆகிய கிராமத்தை சென்றடைந்தது பாரத் யாத்ரா. முற்போக்கு விவசாயிகள் யாத்ரா வாகனத்திற்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.

முற்போக்கு விவசாயியுடன் கலந்துரையாடல்:

கிசான் பாரத் யாத்ராவிற்கு ராம்புரா கிராமத்தின் பனஸ்கந்தா தாராத் என்ற இடத்தில் முற்போக்கு விவசாயியும், வதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனருமான உதேஷி பாய் படேல் மாபெரும் வரவேற்பு அளித்தார். கெலா கிராமத்தில் முற்போக்கு விவசாயியும், DLDP FPO நிறுவனத்தின் இயக்குநரான பனஸ்கந்தா லக்கானி யாத்ரா வாகனத்திற்கு வரவேற்பு அளித்தார்.

பனஸ்கந்தா, மவ்சாரி கிராமத்தில் கிசான் பாரத் யாத்திரைக்கு முற்போக்கு விவசாயியும், மவ்சாரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான நர்பத் பாய் படேல் மாபெரும் வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வில் முற்போக்கு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மே 29-ஆம் தேதி வரை குஜராத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்குள்ள முற்போக்கு விவசாயிகளை அங்கீகரிக்க காத்திருக்கிறது MFOI, VVIF கிசான் பாரத் யாத்ரா.

MFOI VVIF kisan bharat yatra:

MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான்.

MFOI 2024 நிகழ்வு:

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?

உதிரும் இலைச் சருகுகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

English Summary: MFOI VVIF Kisan Bharat Yatra was given a grand welcome by Vadechi Farmer Producer Company
Published on: 29 April 2024, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now