பாமாயில் உள்ளிட்ட தாவர எண்ணெய்கள் காடுகளை அழித்து வருகின்றன. சமையலுக்கு இவற்றின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, பசுமைக் காடுகளை அழித்து அதில் எண்ணெய் வித்துக்களை பயிரிடும் முறை அதிகரிக்கிறது. இன்று, உலக சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் பதப்படுத்திய உணவுகளில், 50 சதவீதம், பாமாயிலில் சமைக்கப்பட்டவை. அதேபோல, தாவர எண்ணெய்களில் கலோரி அதிகம் உள்ளதால், அவற்றை மிகையாக உண்பவர்கள் பருமனாகின்றனர். தாவரங்களை தவிர்த்து, சமையல் எண்ணெயை தயாரிக்க முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்பதே பதில்.
நுண்ணுயிரிகள் (Microbes)
ஏற்கனவே, 'பீர்' மற்றும் இதர மதுபானங்களை தயாரிக்க உதவும் நொதித்தல் முறையில், ஈஸ்ட்டுகள் பயன்படுகின்றன. இதே நொதித்தல் முறையில் சில வகை நுண்ணுயிரிகள் கொழுப்பு மற்றும் எண்ணெயை உற்பத்தி செய்கின்றன.
அமெரிக்காவிலுள்ள 'ஜீரோ ஏக்கர் பார்ம்ஸ்' என்ற புத்திளம் நிறுவனம், நுண்ணுயிரிகளை வைத்து எண்ணையை உற்பத்தி செய்ய முயன்று வருகிறது. அதில் நுண்ணுயிரிகள் தயாரிக்கும் எண்ணெயை, தாவர சமையல் எண்ணெய்க்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.
ஜீரோ ஏக்கரின் நுண்ணுயிரி எண்ணையை வழக்கமான சமையலுக்குப் பயன்படுத்தினால் துளியும் வேறுபாடு காண முடிவதில்லை என முதற்கட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த முறை பரவினால், காடுகள் அழிவது தடுக்கப்படும். உடல் பருமன் அதிகரிப்பதும் குறைக்கப்படும்.
மேலும் படிக்க
நடுவானில் பரபரப்பு: பாத்ரூம் என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!