தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலான மழை பெய்தது மற்றும் மேற்கு வங்கக் கடலில் பலத்த காற்று வீசி வந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டது.
இதை தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்கால், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய வானிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இன்றைய நிலவரம்
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாகவும், காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவில் முதல் அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை நகரம் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
K.Sakthipriya
Krishi Jagran