நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2022 8:08 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000மாக உயரும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்கு நீண்ட காலம் காத்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது, ஊதிய உயர்வுக்காக, க மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

கோரிக்கை

52 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்தக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி மாற்றத்திற்குப் பிறகு, சம்பள அமைப்பும் மாறும். அகவிலைப்படி உயர்வு சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. எனவே ஃபிட்மெண்ட் காரணியிலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

​ஃபிட்மெண்ட் காரணி

அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கீட்டில் ஃபிட்மெண்ட் காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, ஃபிட்மெண்ட் காரணி 2.57 % ஆக உள்ளது. இதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த மாதத்திற்குள் ஃபிட்மெண்ட் காரணியை அதிகரிக்க அரசு முடிவு எடுக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

26,000 ரூபாயாக

கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000மாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஃபிட்மெண்ட் காரணி அதிகரித்தால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயரும்.

உயர்வு எவ்வளவு?

அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக இருக்கும்போது ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆக இருந்தால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, 18,000 X 2.57 = 46260.
ஆனால் ஃபிட்மெண்ட் காரணி 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியரின் சம்பளம் 26000 X 3.680 = ரூ.95680 ஆக இருக்கும். எனவே இந்த உயர்வு எப்போது கிடைக்கும் என்று ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

English Summary: Minimum Salary rises to Rs 26,000 - jackpot for central government employees!
Published on: 15 November 2022, 08:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now