கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் புதிய டிராக்டர் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரூ .1 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீட்டு (Health Insurance) திட்டத்தையும், மேலும் விவசாயிகளுக்கு அவசர நிதி உதவி திட்டத்தையும் அறிவித்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா தனது எம்-ப்ரொடெக்ட் கோவிட் (M-Protect COVID) திட்டத்தின் மூலம் உதவிகளை செய்யவிருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிராக்டர் வாடிக்கையாளார்களுக்கு இன்சூரன்ஸ்
இந்த நிறுவனத்தின் M-Protect COVID திட்டத்தின் மூலம் புதிய டிராக்டர் வாடிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், கோவிட்-19 பாதிப்பிலிருந்து நிதி ரீதியிலாக பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அதனை ஈடுகட்ட இன்சூரன்ஸ் மூலம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தினை எம்&எம் அறிவித்துள்ளது.
கடன் உதவி
கோவிட்-19 சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ செலவினங்களை ஆதரிக்க, கடன் உதவியையும் மஹிந்திரா வழங்கும். இதே வாடிக்கையாளர் துரதிஷ்டவசமாக கொரோனாவின் காரணமாக இறந்துவிட்டால், அவர்களது டிராக்டர் கடனுக்கும் இன்சூரன்ஸ் மூலம் ஈடுகட்டும். இது மஹிந்திரா லோன் சுரக்சா என்ற ஆப்சன் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளது.
யார் யாருக்கு பொருந்தும்?
இது மே 2021ல் வாங்கிய அனைத்து எம்&எம் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளார்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து எம்&எம் நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த் சிக்கா, , எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம் (M-Protect Covid Plan) என்ற திட்டம், விவசாயிகளைக் இலக்காகக் கொண்ட ஒரு புதிய முயற்சி. இந்த கடினமான காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.
ஆரோக்கியமான நிலை
கொரோனா நெருக்கடியின் போது எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டத்தின்(M-Protect Covid Plan) மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் சேவை செய்வதற்கும் நாங்கள் பாக்கியம் அடைகிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் படிக்க..