நாடு முழுதும் 200க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் 'மொபைல் போன் ரீசார்ஜ்' (Mobile Phone Recharge) செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது சேவை மையங்கள் (Public Service Centers)
புதிய சேவைகள் வழங்குவது குறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வேயின் தொலை தொடர்பு பிரிவான 'ரயில் டெல்' ரயில்வே ஸ்டேஷன்களில் தொலை தொடர்பு தொடர்பான பல்வேறு சேவைகளை ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுதும் 200க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் பொது சேவை மையங்கள் திறக்க முடிவு செய்துள்ளது.
மொபைல் ரீசார்ஜ் (Mobile Recharge)
இந்த மையங்களை கிராமங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரை வைத்து நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும் வசதி, மின் கட்டணம் செலுத்துதல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். பஸ், ரயில், விமான டிக்கெட்களை முன் பதிவு செய்யும் வசதியும் இடம் பெற்றிருக்கும்.
முதல் கட்டமாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையம் திறக்கப்படும். அதன்பின் படிப்படியாக 200க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் படிக்க