ஆலைகளில், எரிசக்தி ஆற்றல் பல வகையில் வீணாவது உண்டு. உதாரணமாக, புகைப் போக்கி குழாய்கள் ஏராளமான வெப்பத்தை காற்றில் வீணாக ஆற்றுகின்றன. பல ஆலைகளில் பல நூறு மீட்டர் குழாய்கள், வெப்ப திரவம் அல்லது வாயுக்களை கடத்துகின்றன. இவையும் பெருமளவு வெப்ப ஆற்றலை வீணடிக்கின்றன. இந்தக் குழாய்களின் மீது வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவியை வைத்தால் பல கிலோவாட் மின்சாரத்தை (Electricity) இலவசமாக தயாரிக்க முடியும். இது ஏட்டளவில் எல்லோருக்கும் தெரியும். என்றாலும், நடைமுறைப் படுத்தப்படவில்லை.
ஜெனரேட்டர் (Generator)
அண்மையில் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநில பல்கலை விஞ்ஞானிகள் இதற்கென ஒரு கருவியை தயாரித்துள்ளனர். 'சீபெக் ஜெனரேட்டர்' எனப்படும் இக்கருவி, தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டை வைத்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த சீபெக் மின்உற்பத்தி கருவியை வளைந்து கொடுக்கும் தகடு போன்ற வடிவில் பென்சில்வேனியா விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். அவற்றை அப்படியே ஒரு ஆலையின் வெப்பக் குழாய்களின் மீது போர்த்தினர். அந்தக் கருவிகள் 115 சதவீத மின் அடர்த்தியுடன் செயல்பட்டு, 56.6 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இது இலவச மின்சாரம் என்பது குறிப்படத்தக்கது.
விரைவில் இந்த முறையை பெரிய ஆலைகளில் செயல்படுத்தி, எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் சோதிக்கவுள்ளனர். இம்முறை நடைமுறைக்கு வந்தால், அதிக அளவு மின்சாரத்தை மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்.
மேலும் படிக்க
உயிர்ப் பறிக்கும் சயனைடு தான், உயிர்கள் உருவாக காரணம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
இந்த நாட்டில் வாரத்திற்கு நான்கு நாள் தான் வேலையாம்: சூப்பர் அறிவிப்பு!