மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் மற்றும் பருவநிலை மாற்றத்தால், இந்தியா ஒரு இருண்ட காலகட்டத்தில் இருந்து மீள முயன்று கொண்டிருக்கிறது. இத்தகைய கடினமான காலங்களில் கூட விவசாயிகள் தங்கள் வயல்களில் அயராது உழைத்து மக்களுக்கு உணவளிக்க போராடுகிறார்கள். பருவமழை மிகவும் முக்கியமானது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பருவமழை பெய்கிறது. இது போன்ற மழைக்காலத்தில் தான் வயல்களில் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றன. மேலும், வறட்சி போன்ற காலங்களில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மழைக்காலங்களில் தான் நீர்த்தேக்கங்களும் நிரப்பப்படுகின்றன.
இந்த முக்கியமான காலகட்டத்தில் Helo App Tamil மற்றும் கிருஷி ஜாகரன் இணைந்து விவசாயம், பருவமழை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை ஊக்குவிக்க "#பருவமழை2020" (#Monsoon2020) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் விவசாயிகளின் அவலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், விவசாயம் சார்ந்த தகவல்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் விவசாயம் குறித்த முழுமையான தகவல்களை பெற ஹலோ ஆப் மூலம் கிருஷி ஜாக்ரனுடன் இனணந்திருங்கள்