சீனியர் சிட்டிசன்களுக்கு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான மாத வருமானம் கிடைக்க வகை செய்யும் வகையில், எஸ்பிஐ வழங்கும் எஸ்பிஐ ஆண்டுத்தொகை டெபாசிட் திட்டம் அமைந்துள்ளது.
ஓய்வு பெறும் காலத்தைக் கருத்தில்கொண்டு, வேலை செய்யும்போதோ, இளமை காலம் முதலோ சேர்த்து வைப்பது, கடைசிகாலத்தில் நாம் நிம்மதியாக இருக்க உதவும். இதனைக் கருத்தில்கொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டில் பணத்தைச் செலுத்துவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். அதிலும்,பங்குச் சந்தைகள் சரிந்து வரும் சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான, ரிஸ்க் இல்லாத முதலீடுகளை தேடிச் செல்கின்றனர். இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) எஸ்பிஐ ஆண்டுத்தொகை டெபாசிட் திட்டத்தை (SBI Annuity Deposit Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது.
SBIயின் புதியத் திட்டம்
இத்திட்டத்தில் முதலீடு செய்வதால் நிலையான வருமானத்தை தொடர்ந்து பெறமுடியும். அதாவது, முதலீட்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை மொத்தமாக டெபாசிட் செய்துவிட வேண்டும். இத்தொகையுடன் வட்டி சேர்த்து மாதம் தோறும் உங்களுக்கு தவணை தொகையை எஸ்பிஐ செலுத்தும்.
இதன் மூலம் மாதம் தோறும் நிலையான வருமானத்தை பெற முடியும். உங்களுக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் நீங்கள் டெபாசிட் செய்த அசல் தொகை, வட்டி இரண்டும் இருக்கும். 3 ஆண்டு, 5 ஆண்டு, 7 ஆண்டு, 10 ஆண்டு என உங்கள் விருப்பம் போல முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்
-
ஃபிக்சட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் அதே வட்டி விகிதம் எஸ்பிஐ ஆண்டுத் தொகை திட்டத்துக்கும் வழங்குகிறது எஸ்பிஐ வங்கி. அதாவது 5.45% முதல் 5.5% வரை வழங்கப்படும்.
-
சீனியர் சிட்டிசன்களுக்கு 5.95% முதல் 6.30% வரை வட்டி வழங்கப்படும். எனவே, மாத வருமானத் திட்டங்களை தேடும் சீனியர் சிட்டிசன்களுக்கு இதுவொரு சூப்பர் திட்டம்.
கடன் வசதி
டெபாசிட் தொகையில் 75% வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம். கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு மட்டுமே கடன் வசதி உண்டு.
குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!