MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் குவாலியர் (Gwalior) பகுதியில் வெகு விமர்சையாக நிகழ்வு நடைப்பெற்றது.
மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில், மஹிந்திரா டிராக்டர்ஸ் ஆதரவுடன் நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் துறை வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:
குவாலியர் பகுதியில் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் கண்டறியப்பட்ட முற்போக்கு விவசாயிகள் தாங்கள் மேற்கொண்டு வரும் வேளாண் பணிகளை குறித்தும், அதில் சந்தித்த சவால்களை கையாண்ட விதம் குறித்தும் மற்ற விவசாயிகளுக்கு முன் எடுத்துரைத்து உரையாற்றினர். நிகழ்வின் முக்கிய பகுதியாக, முன்னோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் தொடக்க பகுதியாக கிரிஷிஜாக்ரன் குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை பொறுப்பாளர் சுஜித் பால், நிகழ்வின் நோக்கம் குறித்தும், கிரிஷி ஜாக்ரன் முன்னெடுத்துள்ள MFOI நிகழ்வு குறித்தும், அவை எந்தளவிற்கு விவசாயிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் உரையாற்றினார். குவாலியர் பகுதி வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சத்திய பிரகாஷ் தோமர், மற்றொரு வேளாண் விஞ்ஞானியான முனைவர் படோரியா ஆகியோர் தங்களது துறை சார்ந்து, வந்திருந்த விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
இவர்கள் தவிர்த்து மஹிந்திரா டிராக்டர் நிறுவனத்தின் சார்பில் ரூஜூடா கம்ப்ளீ பங்கேற்று விவசாய பணிகளுக்கு ஏற்ற மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் குறித்து உரையாற்றினார். மேலும் மஹிந்திரா டிராக்டர் பராமரிப்பு தொடர்பான விஷயங்கள் மற்றும் டிராக்டரில் தற்போது நிறுவப்பட்டுள்ள புதுமையான டிஜிட்டல் அம்சங்கள் குறித்தும் மஹிந்திரா நிறுவனத்தின் மிருத்ஜானி நகர்,விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்..
நிகழ்வின் தலைமை சிறப்பு விருந்தினராக குவாலியர் பகுதியிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல்வர் முனைவர் தோமர் பங்கேற்று முற்போக்கு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் மஹிந்திரா டிராக்டர் நிறுவனமும், தங்களது டிராக்டர் இயந்திரங்களை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தி அதுத் தொடர்பாக விளக்கமும் அளித்தார்கள்.
MFOI 2024- விண்ணப்பங்கள் வரவேற்பு: MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3,2024 வரை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!
NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு