இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில், ஒரு குடிமகனின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருவது, ரேஷன் கார்டாகும். முக்கிய ஆவணமாக மட்டும் அல்லாது, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வாங்கி பயன்பெறவும், இது உதவுகிறது.
அதோடு சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் கூட, ரேஷன் கார்டு மிக அவசியமான ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. இப்படி முக்கியமாக இருந்து வரும் ஆவணத்தினை எளிதில் விண்ணப்பித்தும் பெற முடியும், என்பது நம்மில் பலர் அறியாத விஷயமாகும்.
இந்தியாவினை பொறுத்தவரையில் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மாத கணக்கில் அலைந்து திரிந்த காலம் போய், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, எளிதில் தங்களது வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். முன்பெல்லாம் புதியதாக ஒரு ரேஷன் கார்டு விண்ணப்பித்தால், பல மாதம் அலைந்து விண்ணப்பித்தல் வேண்டும். அந்த கார்டு வரவும் பல மாதங்கள் கடந்துவிடும்.
ஆனால் இப்போது இந்த சேவையையும், ஆன்லைனில் பெறலாம். மேலும் இதன் மூலம் மாத கணக்கில் செய்த வேலையை, சில நாட்களில் செய்து முடித்துவிடலாம். அந்த வகையில், மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம்.
இணையத்தில் எப்படி விண்ணபிப்பது? வாருங்கள் பார்ப்போம்
https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் செல்ல வேண்டும், புதிய மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும். உங்கள் முன் புதிய பக்கம் திறக்கும், அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு மற்ற விவரங்களை பூர்த்தி செய்யவும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் எண், இணைய ஐடி என பலவற்றையும் சரியாக பூர்த்தி செய்யவும். அதோடு விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் உங்கள் ஸ்கேன் செய்த பாஸ் போர்ட் போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருத்தல் வேண்டும்.
அட்டை தேர்வு (Card selection)
அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யவும். இது 1 எம்பி அளவில் இருத்தல் வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம்.
அதன் பிறகு, உறுப்பினர்கள் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயர். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும், அதில் பூர்த்தி செய்யாதவற்றை நிரப்பவும். உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்திட வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும், இதன் பின்னரே உங்கள் பதிவு சேமிக்கப்படும். அவ்வாறே குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் பூர்த்தி செய்யவும்.
கேஸ் விவரம் அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை நிரப்ப வேண்டும். எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat) என நிரப்ப வேண்டும். ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் எனவும் பதிவு செய்ய வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து கொண்டு, உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும். இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பித்த பிறகு, ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
UPSC ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 22
தமிழகம்: மாணவர்களுக்கு குட் நியூஸ், வரும் 26-ம் தேதி No Bag Day அறிவிப்பு!