மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 34% உயர்த்த அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன் ஏற்கனவே 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை மத்திய அரசு இந்த மாதம் வழங்க உள்ளது. எனவே இந்த தொகையை எவ்வாறு, எதற்கெல்லாம் செலவழிக்கலாம் என்பதை அரசு ஊழியர்கள் இப்போதேத் திட்டமிடலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA எனப்படும் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படுவது, ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக இருந்தது. இந்நிலையில் அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புதிய அகவிலைப்படி
அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும். இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். ஆண்டுக்கு ஜனவரி, ஜூலை என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அகவிலைப்படி என்பது அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு ஜூனியர் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அதில் முந்தைய அகவிலைப்படி 31% என்றால் 5,580 ரூபாய். இப்போது அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அதே அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 6120 ரூபாய் கிடைக்கும். அதாவது, அவருக்கு அகவிலைப்படி 540 ரூபாய் உயரும்.
நிலுவையில் உள்ள தொகையை அரசு ஒரே செட்டில்மெண்டாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவரவர் லெவலுக்கு (Level) ஏற்ப சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும். எனவே இந்தத் தொகைக்கு எந்த செலவைச் செய்யலாம் என மத்திய அரசு ஊழியர்கள் இப்போதேத் திட்டமிடலாம்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!