பென்சன் வாங்குவோருக்கு புதிய வசதியை தமிழக அரசு முடிவு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இனி தமிழகத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வீணாக அலையத் தேவையில்லை. அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வாழ்நாள் சான்றிதழ் பெறப்படும்.
வாழ்நாள் சான்றிதழ்
ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழை (life certificate) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று.
நவம்பர் 30
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொடர்ந்து கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் பென்சன் கிடைக்காது.
எனினும், கொரோனா நெருக்கடி காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஓய்வூதியதாரரின் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகையில், தமிழக அரசும் இத்திட்டத்துக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதிய சேவை
அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திலேயே நேரடியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படும்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெறுவது எளிதாகும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இருப்பிடத்தில்
இதன்படி இனி தமிழகத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வீணாக அலையத் தேவையில்லை. அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வாழ்நாள் சான்றிதழ் பெறப்படும்.
மேலும் படிக்க...