ஓய்வூதியதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களுக்கான பென்சனைப் பெறுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கி வருகிறது. அரசின் இந்நடவடிக்கை பென்சனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் கொள்கை சீர்திருத்தங்கள், பென்சன் வழங்குவதை டிஜிட்டல்மயமாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எஸ்பிஐ வங்கி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
ஆன்லைன்
தற்போது ஓய்வூதியதாரர்களுக்காக பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களை இணைத்து ஒருங்கிணைந்த பென்சன் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் வசதி
ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital Life Certificate) சமர்ப்பிப்பதற்கு முகம் சரிபார்ப்பு தொழில்நுட்பம் (Face Authentication Technology) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பற்றி வங்கிகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கூறிய திட்டங்களால் ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதே நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகள் விழிப்புணர்வு
இதற்காக நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வங்கிகள் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...