தேசிய பென்சன் திட்டங்களில் சேருவது எளிதான விஷயம் என்றபோதிலும், பணம் செலுத்துவது சற்று சிரமம் மிகுந்ததாகவேக் கருதப்படுகிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் எளிதில் பணத்தைச் செலுத்தலாம்.
முக்கிய அறிவிப்பு
பென்சன் திட்டங்களின் சந்தாதாரர்கள் இனி யூபிஐ ஆப்ஸ் வழியாக பங்களிப்பு தொகை செலுத்தலாம் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால், பணம் செலுத்துவது எளிதானதாக மாறுகிறது.
யூபிஐ (UPI)
பென்சன் திட்டங்களின் பயனாளிகள் இனி யூபிஐ முறையில் எளிதாக பங்களிப்பு தொகையை செலுத்தலாம் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தெரிவித்துள்ளது.
பங்களிப்புத் தொகை
PFRDA ஆணையத்தின் கீழ் தேசிய பென்சன் திட்டம் (NPS), அடல் பென்சன் திட்டம் (APY) ஆகிய இரண்டு பென்சன் திட்டங்கள் நிர்வாகத்தில் உள்ளன. இத்திட்டங்களின் சந்தாதாரர்கள் இதுவரை நெட் பேங்கிங் போன்ற வழிகளில் பங்களிப்பு தொகையை செலுத்தி வந்தனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
எனினும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே யூபிஐ பரிவர்த்தனைகள்தான் மிக எளிதானதாக கருதப்படுகிறது. எனவே பலரும் யூபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர். எனவே, பென்சன் திட்டங்களில் யூபிஐ வழியாக பங்களிப்பு தொகை செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என ஏற்கெனவே சந்தாதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேசிய பென்சன் திட்டம், அடல் பென்சன் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களிலும் யூபிஐ வழியாக பங்களிப்பு தொகை செலுத்தலாம் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தெரிவித்துள்ளது. இதற்கான UPI ID PFRDA.15digitVirtualAccount@axisbank என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூபிஐ ஆப்ஸ்
இதன் மூலம் இனி தேசிய பென்சன் திட்டம் மற்றும் அடல் பென்சன் திட்டத்தின் சந்தாதாரர்கள் மொபைலிலேயே ஈசியாக யூபிஐ ஆப்ஸ் மூலம் பென்சன் பங்களிப்பு தொகையை செலுத்தலாம்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!