சமீபத்தில் எஸ்.பி.ஐ(SBI ) வங்கி தங்களது சேவைகளை பற்றி வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தனர். அது போல இப்போது இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி( LIC ) தனது லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக சேவைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையில் என்னென்ன இருக்கும், எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். பாலிசிக்கு கிடைக்கும் போனஸ், எப்போது முடியும், எந்த நிலையில் இருக்கிறது, கடன் பெறுவதற்கான விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள சிரமப்படுவோம். அதை எளிதாக்கவே இந்த வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறை (Registration Method)
- எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in-க்கு செல்ல வேண்டும்.
- அதில் “வாடிக்கையாளர் போர்டல்” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- மேலும் நீங்கள் புதிய பயனராக இருந்தால், “புதிய பயனர்” என்பதைக் கிளிக் செய்துபெயர், மெயில் ஐடி, தொலைபேசி எண், பிறந்த தேதி போன்ற அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும்.
- உங்களுக்கு தேவையான பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பின் நீங்கள் கொடுத்த பயனர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைன் போர்ட்டலை திறக்க வேண்டும்.
- அதன் பின் “அடிப்படை சேவைகள்” என்பதன் கீழ் “பாலிசியைச் சேர்” என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் உங்களின் அனைத்து பாலிசி எண்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- இந்த போர்டல் மூலமாக பாலிசி ப்ரீமியம் தொகையையும் கட்டலாம்.
வாட்ஸ் ஆப் வழிமுறைகள் (Whatsapp Instructions)
- இணையத்தில் பதிவு செய்ததும் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் எண்ணான 8976862090-ஐ உங்கள் மொபைலில் சேமிக்கவும்.
- அதன் பின் வாட்ஸ் அப்பைத் திறந்து, பின்னர் எல்ஐசி சாட் பாக்சில் ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- அதன் பின் உங்களுக்கு இப்போது 11 ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
- பின் உங்களுக்கு எந்த சேவை தேவையோ அதற்கான எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் எல்ஐசி உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பவும்.
சேவைகள் (Services)
- பாலிசிக்கு செலுத்த வேண்டிய பிரீமியம்
- போனஸ் தகவல்
- பாலிசி நிலை
- கடன் தகுதி கொட்டேஷன்
- கடன் திருப்பிச் செலுத்தும் கொட்டேஷன்
- கடனுக்கான வட்டி
- பிரீமியம் செலுத்திய சான்றிதழ்
- ULIP-அலகுகளின் அறிக்கை
- LIC சேவை இணைப்புகள்
- சேவைகளைத் தேர்வு செய்யவும் / விலகவும்.
மேலும் படிக்க
இனி அனைத்திற்கும் ஆதார் கார்டு தான்: மத்திய அரசு தகவல்!
71 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.48.5 லட்சம் கையில் கிடைக்கும் LIC-யின் சூப்பர் பாலிசி!