அமைப்பு சாரா துறையினருக்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ‘Donate-a-pension' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பென்சன் தொகையை அன்பளிப்பாக வழங்க முடியும்.
பென்சன் தொகை அன்பளிப்பு (Donate a Pension)
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்களுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இன்று தொடங்கியுள்ளார். இத்திட்டத்தில் தானும் உதவி வழங்கி சிறப்பான தொடக்கம் தந்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பக்கத்திலும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு உதவும்படி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். இந்த உதவி அமைப்பு சாரா தொழிலாளர்களைச் சென்றடையும். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தனது தோட்டக்காரருக்கு உதவும் வகையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இதன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
உதவும் மனப்பான்மை (Helping Mind)
நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு உதவியாக இருக்கும் ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா பணியாளர்களுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டத்துக்கான உதவி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்துவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க
PF புதிய விதிமுறைகள்: ஏப்ரல் மாதம் முதல் அமல்!
வைப்பு நிதி வட்டியில் மாற்றம்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம்!