
மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (MOAMC) மோதிலால் ஓஸ்வால் கோல்ட் மற்றும் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்டானது செப்டம்பர் 26 அன்று சந்தா செலுத்துகைகளுக்காக திறக்கப்பட்டு அக்டோபர் 7 அன்று முடிவடைகிறது.
கோல்ட் & சில்வர் (Gold & Silver)
இந்த ஃபண்டின் முக்கிய நோக்கமே இதன்மூலம் அதிகப்படியான வருமானத்தை மூதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தருவதே என ஃபண்ட் ஹவுஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஃபண்டில் 70:30 என்ற அளவில் தங்கள் மற்றும் வெள்ளி முதலீடுகள் இருக்கும். அதன்மூலம் கோலட் மற்றும் சிலவர் ஈடிஎஃப்களில் அதிக வருமான ஈட்ட அது வழி வகை செய்யும். இதில் தங்கத்திற்கு அதிக ஒதுக்கீடு இருப்பதற்கான காரணம் தங்கம் அதிக பொருளாதார மதிப்பைக் கொண்டிருப்பதாலும், அதிக திரவமாக இருப்பதாலும் தங்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு அதிகமாக உள்ளது.
மேலும் இது வெள்ளியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானதாகவும் கருதப்படுவதால் 70% தங்க முதலீடுகளை இந்த ஃபண்ட் கொண்டிருக்கும். மோதிலால் ஓஸ்வால் கோல்ட் மற்றும் சில்வர் ஈடிஎஃப் FOFகளுக்கான குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ. 500 ஆகும். சமீபகாலமாக தங்கள் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் காணுவதால் இந்த ஃபண்ட் கண்டிப்பாக நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் எனக் கூறப்படுகிறது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
EPFO பயனாளரா நீங்கள்? ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள் உங்களுக்கு தான்!